Disclaimer: This is a user generated content submitted by a member of the WriteUpCafe Community. The views and writings here reflect that of the author and not of WriteUpCafe. If you have any complaints regarding this post kindly report it to us.

பதிவு தமிழக அரசியல் பற்றியது. அதனால்  தரம் தாழ்ந்திருக்கலாம். மன்னிக்கவும்.

காமன்வெல்த் போட்டி என்றொரு சங்கதி சத்தமில்லாமல் நடந்து முடிந்துள்ளது. விசேஷம்: இந்தியாவிற்கு 66 பதக்கங்கள். ஊழல், கீழல் என்று ஒரு பேச்சு இல்லை. யார் காரணம்? #GoBackModi

இதே காமன்வெல்த் விளையாட்டுக்கள் டில்லியில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்து, சந்தி சிரித்து, ஊழல் கொப்புளித்து, கல்மாடி (ஊழல்) காவடியாட்டம் ஆடி, கட்டிய பாலம் விழுந்து, ராணுவம் உடனடியாக ஒரு பாலம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்து, காமன்வெல்த் வீடுகள் என்று அடுக்கு மாடி வீடுகள் பாதி கட்டி, அவை ஒழுகி, வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் வந்து பார்த்துப் பயந்து ஓடி, இங்கிலாந்து நிறுவனம் ஏமாற்றப்பட்டு, அவன் கோர்ட்டுக்குப் போய், நாட்டின் பெயரை நாசமாக்கிய நாசகாரக் காங்கிரஸ் ஆட்சி நினைவில் இருக்கலாம். இருந்தாலும் #GoBackModi

ஆதர்ஷ் அடுக்கு மாடி வீடுகள் என்று ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை ஆட்டையப் போட்ட காங்கிரஸ் தலைவர்கள் இன்று சொல்கிறார்கள் #GoBackModi

நாளொரு ஊழல், பொழுதொரு அதிகார துஷ்பிரயோகம் என்று கழித்த பெரியவர்கள் நான்கு ஆண்டுகளில் ஒரு ஊழல் புகாரும் இல்லாத அரசை நடத்தும் பிரமரைச் சொல்கிறார்கள் #GoBackModi

சமஸ்க்ருதத்தை விட தொன்மையானது தமிழ் என்றும், தமிழில் பேச முடியவில்லை என்பதால் வருத்தம் அடைகிறேன் என்று சொல்பவரும், ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உருவாக்கத் தமிழகம் வந்தவருமான பிரதமரைச் சொல்கிறார்கள் #GoBackModi

தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றும், கண்ணகியைத் தூஷித்தவரையும் ( என்ன வார்த்தை என்று எழுதவியலாது), திருக்குறளைப் பழித்தவரையும், ‘தமிழால் என்ன ஆகும்?’ என்று வினா எழுப்பியவரையும் தமிழர் தந்தை என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் நான் தமிழ் கற்கவில்லையே என்று வருத்தப்படுபவரைச் சொல்கிறார்கள் #GoBackModi

வீட்டுக்கு வெளியில் மலம் கழிக்காதீர்கள், ஊரைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிறார் பிரதமர். இதைச் சொல்ல 70 ஆண்டுகள் கழித்து ஒருவர் தேவைப்படுகிறார். சுத்தமாக இருங்கள் என்பதால் அவரைச் சொல்கிறார்கள் #GoBackModi

40 ஆண்டுகளாக ஊழலையே ஒரு கலையாக்கிய கழகக் கண்மணிகள், முடை நாற்றம் எடுக்கும் சொல்லாடல்களைப் பொது வெளியில் உமிழ்ந்து, அதையே மேடைப் பேச்சு, நாகரீகம் என்று கொண்டு வந்து, மக்கள் மனதில் குப்பையைப் போட்டவர்கள் சொல்கிறார்கள் #GoBackModi

ஓடாத சினிமா எடுத்து ஓய்ந்து போனவர்கள், சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று மக்களை ஓட ஓட விரட்டியவர்கள், இவர்கள் படங்களைக் காண்டால் ரசிகர்களைத் தலைதெறிக்க ஓடும்படி செய்த புண்ணியவான்கள், தயாரிப்பாளர்கள் இல்லை என்பதாலும், புலிப்பணம் மிச்சம் இருப்பதாலும் ‘ஆற்றுவதற்கு வேறு ஒன்றும் இல்லை’ என்பதாலும் சொல்கிறார்கள் #GoBackModi

தெருவிற்கு ஒரு மதுக்கடை திறந்து, மொத்த தமிழகத்தின் எதிர்காலத்தையும் பாழாக்கிய தி.மு.க., அவர்களுக்கு ஆதரவளித்த காங்கிரஸ் சொல்கிறார்கள் #GoBackModi

BHEL, NLC, Kalpakkam, IIT, REC என்று நடுவணரச நிறுவனங்களைக் கொண்டு வந்த நேரு / காமராஜ் காலங்களை மறந்தும், அதற்குப் பின் காலணாவிற்குப் பிரயோஜனாமாக ஒரு மத்திய நிறுவனத்தையும் கொண்டு வர வக்கில்லாத திராவிடக் கட்சிகள் சொல்கின்றன #GoBackModi

CLAT –  Common Law Admission Test என்னும் மத்தியச் சட்டப் பல்கலைகளின் நுழைவுத் தேர்வில் பீகார் மாநிலத்தில் இருந்து கூட 5000 மாணவர்கள் தேர்வெழுத, தமிழகத்தில் இருந்து 1500 மாணவர்கள் கூட தேர்வு எழுத முன்வராத நிலையில் தமிழகக் கல்வித் துறையைக் கொண்டு வந்துள்ள திராவிடக் கட்சிகள் சொல்கின்றன #GoBackModi

IIT JEE என்கிற பெருமை வாய்ந்த நுழைவுத் தேர்வில் தமிழகக் கல்வித் துறை வாயிலாக மிகவும் குறைவான அளவே மாணவர்கள் தேர்வாக முடியும் என்கிற நிலையை ஏற்படுத்தியுள்ள திராவிடக் கட்சிகள் சொல்கின்றன #GoBackModi

அவதூறுப் பேச்சுக்களை இலக்கியம் எனவும், வசவுகளை மேடைப் பேச்சு எனவும், எதுகை மோனையை அறிவின் வெளிக்காட்டல் எனவும் ஆக்கி, தமிழர்களை ஆட்டு மந்தைகளாய்த் தலையாட்டச் செய்து 40 ஆண்டுகளாய் நாட்டைச் சுரண்டி உண்டுள்ள திராவிடக் கட்சிகள் சொல்கின்றன #GoBackModi

ஈழம், ஈழம் என்று போக்குக்காட்டி, குழந்தையைச் சுமக்க வேண்டிய இளம் பெண்களின் வயிற்றில் வெடிகுண்டுகளைச் சுமக்க வைத்து, அவர்களின் வெடிமரணத்தில் குளிர்காய்ந்த வீணர்கள், அவர்களுக்கு ஆசை காட்டிக் காட்டியே நாற்பதாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்ற தமிழக அரசியல்வாதியா இவர்? இல்லையே. எனவே திரும்பிப் போகவே செய்வார்.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று வெற்று ஜம்பம் வேறு. ஆமாம். அரசு கள்ளுக்கடைகளில் அறிவழிந்து நிற்கும் இளைஞர் சமூகம் வேலை செய்ய வலிமை இன்றி சோம்பிக் கிடக்க, கட்டடத் தொழில் முதல் விவசாயக் கூலித் தொழில் வரை ஒரிசாவில் இருந்தும், பீகாரில் இருந்தும் வந்து வேலை செய்யும் மக்களைக் கொண்டுள்ள சென்னைத் திராவிடக் காலிகள் சொல்வது #GoBackModi

ஒழுங்காகப் படிப்பும் இல்லை, வேலைத் திறனும் இல்லை. செம்மரம் வெட்டுகிறான் என்று ஆந்திராவில் கைது செய்யப்படும் நிலையில் உள்ள தமிழர்களை வளர்த்துவிட்ட திராவிடத் தலைகள் சொல்வது #GoBackModi

இந்த அழகில் ‘கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில் தோன்றினோம்’ என்று பெருமை வேறு. நியூட்றினோவுக்கும் சாக்லெட்டுக்கும் வேறுபாடு தெரியாமல், படிப்பறிவில்லா மக்களைத் தூண்டி விட்டு அவர்கள் வெயிலில் வேக, சொகுசுக் கார்களில் பவனி வரும் திராவிடக் காலிகளைத் தலைவர்கலாகக் கொண்டுள்ள கட்சிகள் சொல்கின்றன #GoBackModi

ஜெயலலிதா இருந்தவரை வாலைக் கால்களுக்குள் அடக்கிக் கொண்டிருந்துவிட்டு, இப்போது ‘வீரம்’ பேசும் பண்பாடற்ற நடிகர் அல்லவே மோதி. சென்னையில் அவருக்கு வேறென்ன வேலை? ராணுவக் காட்சி முடிந்தவுடன் போகத்தான் போகிறார். இதற்கு என்ன #GoBackModi ?

திரும்பிப் போகத்தான் போகிறார் மோதி. இங்கேயே தங்க இதென்ன பாலாறும் தேனாறும் ஓடும் குஜராத் மாநிலமா என்ன? வேலை இல்லாத வம்பர்கள் கூடிப் போராட்டம் எனும் பெயரில் புலிப் பணத்தையும் மத மாற்றுப் பணத்தையும் செலவு செய்து கறுப்புச் சட்டை அணிந்து பொரியும் வெயிலில் வாட மோதி என்ன ஈரோட்டுப் பாதையில் வேலை வெட்டியின்றிச் சுத்திய திராவிடக் குழப்பவாதியா?

எனவே வந்த வேலை முடிந்ததும் திரும்பிச் செல்வார் மோதி

நாட்டைச் செல்வ வளப் பாதையில் கொண்டு செல்வார் மோதி

தமிழ் நாட்டைத் திருத்திப் பணி கொள்வார் மோதி

திராவிடப் பிணி அகற்றுவார் மோதி

தீரா விடப் பிணி அகற்றுவார் மோதி

நம் பிரதமர் மோதி எனும் போதி

இதை அறியாதார் கபோதி.

பி.கு.: இதுவரை பொறுமையாகப் படித்ததற்கு நன்றி. பிடித்திருந்தால் பகிரவும். பிடிக்காவிட்டால் அடியேனை அர்ச்சனை செய்து எழுதவும். ஆனால் எதுவும் செய்யாமல் மட்டும் இருக்காதீர்கள்.

Advertisements

__ATA.cmd.push(function() {
__ATA.initSlot(‘atatags-26942-5adc5bd4c0ead', {
collapseEmpty: ‘before',
sectionId: ‘26942',
width: 300,
height: 250
});
});

__ATA.cmd.push(function() {
__ATA.initSlot(‘atatags-114160-5adc5bd4c0eaf', {
collapseEmpty: ‘before',
sectionId: ‘114160',
width: 300,
height: 250
});
});

Login

Welcome to WriteUpCafe Community

Join our community to engage with fellow bloggers and increase the visibility of your blog.
Join WriteUpCafe